24.8 C
Jaffna
January 26, 2025
Pagetamil
மருத்துவம்

50 வயசுக்கு அப்புறம் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?

ஆரோக்கியமான கருமுட்டை இருந்தால் பெண்கள் எளிதில் கருத்தரிக்கலாம். ஆனால் பெண்களின் வயது 30 ஐ கடக்கும் போது படிப்படியாக கருமுட்டை ஆரோக்கியம் குறைகிறது. அதனால் தான் சரியான காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று காலங்காலமாக சொல்வதே. தொடர்ந்து 50 வயதை கடந்த பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா, அது சாத்தியமா என்பது குறித்து பார்க்கலாம்.

பிரபலங்கள் 45 வயதிலும் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதற்கு பிறக்கும் கூட குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள்.
வயதான கருத்தரிக்க விரும்பும் போது வயதான பெண்களுக்கு ஆரோக்கியமான கர்ப்பம் மற்றும் கருத்தரிப்பை கடினமாக்க பல காரணங்கள் பங்களிக்கின்றன. ஆனால் 50 வயதிலும் கருத்தரிக்க முடியுமா? என்று கேட்கலாம். இது சாத்தியமானது தானா என்பதை தொடர்ந்து படித்து அறிவோம்.

கருவுறுதலில் பிரச்சனை

பெண்ணின் கருத்தரிக்கும் திறன் மாதவிடாய் நிற்கும் சமயத்துடன் முடிவடைகிறது. குறிப்பாக மாதவிடாய் 12 மாதங்கள் தொடர்ந்து வராமல் நின்றால் இயற்கை கர்ப்பம் சாத்தியமில்லை. குறிப்பாக 51 வயது ஆன பிறகு என்று சொல்லலாம். இந்த காலகட்டத்தில் மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்ற முறையில் இறுதியில் முடிவடைகிறது.

மாதவிடாய் சீராக இருந்தால் குழந்தைப்பேறு சாத்தியமா என்று கேட்கலாம். ஆனால் நாற்பது வயதை கடந்தாலே மாதவிடாய் சீராக இருந்தாலும் அந்த பெண்ணின் கருமுட்டை தரம் இளம்பெண்களின் முட்டைகளை விட குறைவாக இருக்கும். 42 வயதுக்கு மேல் பெண் குழந்தையை கருத்தரிக்க சிரமத்தை உணர்வார்கள். பெண் 40 வயதாகும் போது அவளுடைய கருமுட்டை 3 % மட்டும் உண்டு. இது போதுமானதாக இல்லை. ஆனால் பெண்களை காட்டிலும் ஆண்கள் வளமாக இருப்பார்கள். தந்தை வழியில் மரபணு குறைபாடுகளின் ஆபத்து இருந்தால் இவர்களும் அதை எதிர்கொள்வார்கள்.

50 வயதில் கர்ப்பம் சாத்தியமா?

50- 42 வயதை கடந்தவர்களுக்கே கருவுறுதலில் பிரச்சனை எனும் போது 47 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களில் 0.01 சதவீதம் மட்டுமே இயற்கை பிறப்புகள் நிகழ்கின்றன. இவர்களுக்கு ஒரே வழி விட்ரோ கருத்தரித்தல் மற்றும் முட்டை தானமாக பெறுவது தான். 50 வயதை கடந்த பிறகு கருத்தரிப்பை நீங்கள் கருத்தரிக்க முயற்சி செய்ய முன்பு சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அப்படி நீங்கள் தயாராக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.

50 வயதுக்கு பிறகு பாதுகாப்பற்ற முறையில் 6 மாதங்கள் உடலுறவு கொண்ட பிறக்கும் கருத்தரிக்கவில்லை எனில் கரு நிபுணரை அணுக வேண்டும். அல்லது முன்கூட்டியே மருத்துவரை அணுகுங்கள். குறிப்பாக ஒழுங்கற்ற மாதவிடாய், அண்டவிடுப்பு சிரமங்கள், விந்தணுக்கள் பிரச்சனை ஏதேனும் இருந்தால் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை தேவை. உடன் கருப்பை ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். கருமுட்டை இயற்கையாக கருத்தரிப்பதில் சிக்கல் இருந்தால் உங்களுக்கு முட்டை தானம் குறித்து மருத்துவர் பரிந்துரைக்கலாம். அதை தொடர்ந்து உங்களுக்கு உளவியல் ரீதியிலான ஆலோசனை செய்ய வேண்டும்.

பெண் கருமுட்டைகளை பெறுவதற்கு தயாராக ஒரு மாதங்கள் மேல் ஈஸ்ட்ரோஜன் மற்றும் பிரஜெஸ்ட்ரோன் எடுத்துகொள்வாள். முட்டை கருப்பையில் பொருத்தப்பட்ட பிறகு மேலும் இரண்டு மாதங்கள் வரை ஈஸ்ட்ரோஜன் மாத்திரைகள் எடுத்துகொள்வார். தொடர்ந்து கர்ப்பத்தின் 10 வாரங்கள் வரை புரோஜெஸ்ட்ரான் எடுத்துகொள்ளவும் பரிந்துரைப்பார்.

50 வயதுக்கு பிறகு கர்ப்பத்தால் உண்டாகும் நன்மைகள்.

50 வயதுக்கு பிறகு குழந்தை பெறும் பெண்கள் நீண்ட காலம் வாழ்வாரகள். பெண்கள் தங்கள் வாழ்க்கையில் நிதி நிலையில் சிறப்பாக இருப்பார்கள். அதனால் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அதிக வயதில் குழந்தை பெறும் போது அனுபவமுள்ளவர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் பல விஷயங்களில் அனுபவம் இருப்பதாலும் பாதுகாப்பான எண்ணம் கொண்டிருப்பதாலும் நல்ல புத்திசாலியான பெற்றோராக இருப்பீர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment