24.5 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனாவினால் ஒருவர் உயிரிழப்பு!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று (4) மாலை உயிரிழந்துள்ளார்.

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட துன்னாலை பொதுச் சுகாதார பிரிவில் துன்னாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் 5 மாதங்களுக்கு முன்னரே உடல் நலக் குறைபாடு காரணமாக படுக்கையில் இருந்துள்ளார்.

அவரது மருமகன் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் பணிபுரிந்த போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று கடந்த 19 ம் திகதி உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரின் உறவினர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட போது நேற்று குறித்த வயோதிபருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் சிவப்பு குடிநீர் விநியோகம் – அவதியில் மக்கள்

east tamil

அரசாங்கத்தின் மீது சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

east tamil

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம்

Pagetamil

ஐம்பது மீற்றரில் உள்ள பாடசாலை மைதானத்திற்கு ஒரு கிலோ மீற்றர் நடந்து செல்லும் மாணவர்கள்

Pagetamil

புதையல் தோண்டிய இருவர் கைது

east tamil

Leave a Comment