24.2 C
Jaffna
January 7, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

எடையை குறைக்கும் சிறந்த டிப்ஸ்.

பொதுவாக எடையை குறைக்க வேண்டும் என்றால் உணவில் கொழுப்புகளை சேர்க்கக் கூடாது என்பார்கள். ஆனால் உண்மையில் உடல் எடையை குறைக்க நல்ல கொழுப்பு உணவுகளை உணவில் சேர்க்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். அந்த வகையில் பார்க்கும் போது எடை குறைப்பில் நெய், வெண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் இவற்றில் எது சிறந்தது. கீட்டோ டயட் இருப்பவர்களுக்கு இந்த மூன்றில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குழப்பம் இருக்கும்.

இந்த மூன்று பொருட்களின் கொழுப்பு சங்கிலியும் சற்று வித்தியாசம் ஆனது. ஆலிவ் ஆயில் நீண்ட கொழுப்பு சங்கிலியையும், நெய் குறுகிய கொழுப்பு சங்கிலியையும், பட்டரில் கொழுப்பு சங்கிலியும் நீரும் காணப்படுகிறது. நெய்யின் உயர் வெப்பநிலை ஆலிவ் ஆயில் மற்றும் பட்டரை விட அதிகமாகும். எனவே தான் நெய்யை நீங்கள் அதிகமாக சூடுபடுத்தும் போது அதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் அதன் புகை வெப்பநிலையை எட்டும் போது கெட்ட கொழுப்பாக மாற்றப்படுகிறது. எனவே இந்த மூன்றையும் நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொருத்து உங்க எடை இழப்பு உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள். சரி வாங்க இந்த மூன்றில் எது சிறந்தது எதைக் கொண்டு உங்க உடல் எடையை குறைக்க முடியும் என அறிவோம்.

​எடையை குறைக்க கொழுப்பு ஏன் அவசியம்?

சில வகையான கொழுப்புகள் நம்மை திருப்திகரமாக உணர வைக்க உதவுகிறது. மேலும் கொழுப்புகள் சில அத்தியாவசிய விட்டமின்கள் உறிஞ்ச உதவி செய்கிறது. இந்த கொழுப்புகளை நீங்கள் பட்டர், ஆலிவ் ஆயில் மற்றும் நெய் போன்றவற்றில் இருந்து பெற முடியும்.

​பட்டரின் நன்மைகள் :

கீட்டோஜெனிக் டயட்டை பின்பற்றுபவர்களுக்கு பட்டர் ஒரு முன்னுரிமை பொருளாக பார்க்கப்படுகிறது. இதில் டிரான்ஸ் கொழுப்புகள் போன்ற கெட்ட கொழுப்புகள் இல்லை. இது பாலில் இருந்து பிரிக்கப்படுவதால் விட்டமின் ஏ, ஈ, ஆன்டி ஆக்ஸிடன்கள், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. இது உடல் பருமன் மற்றும் இதய நோய் அபாய வாய்ப்பை குறைந்தளவே கொண்டுள்ளது. ஒரு ஸ்பூன் பட்டரில் 100 கலோரிகளும், 12 கிராம் கொழுப்பும் காணப்படுகிறது.

ஆலிவ் ஆயில் நன்மைகள் :

மத்திய தரைக்கடல் டயட்டில் ஆலிவ் ஆயில் தான் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆலிவ் எண்ணெய்யில் மோனோசேச்சுரேட்டேடு கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது எடை இழப்புக்கு உதவுவதோடு வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலில் 119 கலோரிகள், 13.5 கிராம் கொழுப்பு ஆகியவை காணப்படுகிறது. ஆலிவ் எண்ணெய்யில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது.

​நெய்யின் நன்மைகள்

கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்களான விட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவற்றை உறிஞ்ச கொழுப்பு உதவுகிறது. பால் ஒவ்வாமை இருப்பவர்களுக்கும் நெய் ஏற்றது. நெய்யில் குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. இவை எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது. 1 ஸ்பூன் நெய்யில் 115 கலோரிகள், 9.3 கிராம் நிறைவுற்ற கொழுப்பு, 0 கார்போஹைட்ரேட் மற்றும் 38.4 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது.

​எது ஆரோக்கியமான தேர்வு

நெய் மற்றும் வெண்ணெய் இரண்டும் பாலில் இருந்து பெறப்படுகிறது. நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால் நட்ஸ் எண்ணெய் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த மூன்றிலும் கொழுப்பு மூலங்கள் காணப்படுகிறது. சிறந்த ஊட்டச்சத்து நன்மைகளை தேடுவதன் மூலம் எடை இழப்பை நீங்கள் பெற முடியும். இந்த மூன்றில் ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பட்டரையையும், நெய்யையும் மிதமான அளவில் சேர்த்து பயன் அடையலாம்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment