விஜய் சேதுபதிக்கே முத்தமா?:சந்தீப் கிஷன்

Date:

எப்பவும் அவர் தான கொடுப்பாரு .. இந்த தடவை நான் கொடுக்கிறேன்: வைரலாகும் புகைப்படம்!

ராஜ் மற்றும் டிகே இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் அண்மையில் அமேசான் பிரைம் தளத்தில் வெளியான ‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸ் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. தொடர்ந்து அமேசான் பிரைம் தளத்திற்காக இவர்கள் இயக்கும் புதிய வெப் சீரிஸில் விஜய் சேதுபதி, ஷாகித் கபூர், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

திரை அலை தொடங்கியதில் இருந்து ஓடிடி தளங்களுக்கும், வெப் தொடர்களுக்கும் மவுசு அதிகமாகிவிட்டது. பாலிவுட் உள்ளிட்ட தென்னிந்திய மொழியில் உருவாகும் வெப் தொடர்களில் வெள்ளித்திரையை சேர்ந்த பிரபலங்களும் நடிக்க ஆரம்பித்துவிட்டனர். தமிழிலும் முன்னணி இயக்குனர்களும், நடிகர்களும் ஓடிடி தளங்களுக்காக படம் இயக்க, நடிக்க ஆரம்பித்து விட்டனர்.

தொடர்ந்து ‘தி பேமிலி மேன்’ வெப் தொடர் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே அமேசான் ப்ரைம் தளத்திற்காக இயக்கப்படும் புதிய வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தொடரில் ஷாகித் கபூர், ராஷி கண்ணா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

இந்த தொடர் சம்பந்தமான சந்திப்பில் விஜய் சேதுபதியும், சந்தீப் கிஷனும் கட்டித்தழுவி முத்தமிட்டுக் கொண்டனர். இந்தப் புகைப்படங்களை சந்தீப் கிஷன் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ராஜ் & டிகே இயக்குனர்களின் ‘தி பேமிலி மேன்’ முதல் சீசனில் சந்தீப் கிஷன் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்