மட்டக்களப்பில் விளையாடியவர்களிற்கு பிசிஆர்!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், விளையாட்டு நிகழ்வில் ஈடுபட்ட 17 இளைஞர்கள் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் உள்ள மகிழடித்தீவு விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது அப்பகுதிக்கு சென்ற பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் க.ரமேஸ் தலைமையிலான சுகாதார குழுவினரும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் விளையாட்டு நிகழ்வினை தடுத்து நிறுத்தியதுடன், விளையாட்டு நிகழ்வில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கையினையும் விடுத்தனர்.

முகக்கவசங்கள் அணியாமலேயே நிகழ்வில் இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மகிழடித்தீவு விளையாட்டு மைதானத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறியவர்கள் பீசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் யாராவது தொற்றாளர்களாக இனங்காணப்பட்டால் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் க.ரமேஸ் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

FIFA WC 2026 | பிரான்ஸை துவம்சம் செய்து வெண்கலம் வென்றது இங்கிலாந்து!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ்...

‘இதுதான் வாழ்க்கை’: குழந்தை யமாலுடன் எடுத்த புகைப்படம் பற்றி மெஸ்ஸி விளக்கம்!

அர்ஜென்டினா கப்டன் லயோனல் மெஸ்ஸி, யமால் குழந்தையாக இருந்தபோது இருவரும் ஒன்றாகப்...

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்