வீதியில் வீழ்ந்து உயிரிழந்தவருக்கு கொரோனா!

Date:

ராகம, பட்டுவத்த, சுபசிங்க மாவத்தையில் வசிக்கும் 62 வயதான நபர் வீதியில் வீழ்ந்து உயிரிழந்தார். அருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இருமல் மற்றும் சிறிய மார்பு வலி காரணமாக ராகமவில் உள்ள தனியார்
வைத்தியசாலைக்கு சென்ற அவருக்கு விரைவான ஆன்டிஜென் சோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று உறுதியானது.

பின்னர் அந்த நபர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாகவும், வைத்தியசாலையியில் இருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில்- வீதியில் வீழ்ந்து உயிரிழந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இறந்தவர் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற்றார். இரண்டாவது டோஸைப் பெற காத்திருந்தார் என்பதும் தெரியவந்தது.

சடலம் ராகம போதனா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு பிசிஆர் பரிசோதனையில் இறந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் வீதியில் வீழ்ந்து உயிரிழந்த முதியவருக்கும் கொரொனா தொற்று உறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்...

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்