27.1 C
Jaffna
April 26, 2024
இலங்கை

ஜனாதிபதி பிரிட்டன்-அமெரிக்கா செல்கிறார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளிநாட்டுப் பயணம் செல்லத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஜனாதிபதி முதலில் பிரிட்டன் செல்ல உள்ளார். லண்டனில் நடைபெறும் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஜனாதிபதியின் முடிவைத் தொடர்ந்து, மாநாட்டு அமைப்பாளர்கள் இந்த முடிவைப் பாராட்டி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். கூடுதலாக, அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த ஜனாதிபதியை அழைத்திருந்தனர்.

அந்த அழைப்பை ஏற்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி எதிர்வரும் செப்டம்பர் மாதம் லண்டன் செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

லண்டன் உச்சிமாநாட்டிற்குப் பிறகு நேரடியாக அமெரிக்கா செல்லவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர் வாஷிங்டனில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் இம்முறை பயணித்தால், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஐநா பொதுக்கூட்டத்தில் கோட்டாபய கலந்து கொள்ளும் முதல் சந்தர்ப்பமாப அமையும்.

அந்த விஜயத்தின் போது ஜனாதிபதி தனது பேத்தியை முதல் முறையாகப் பார்க்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பல்டி குழுவின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க

Pagetamil

மாணவியுடன் முறையற்ற பேசிய நடத்துனருக்கு கத்திக்குத்து: இதுவரை 5 பேர் கைது!

Pagetamil

தமிழ் அரசு கட்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Pagetamil

‘முஸ்லிம்களில் எனக்கு நெருக்கமானவர்கள் இல்லை’: கர்தினாலின் குற்றச்சாட்டுக்கு கோட்டா பதில்!

Pagetamil

வேலையற்ற பட்டதாரிகள் யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட தீர்மானம்!

Pagetamil

Leave a Comment