வரதட்சணை கொடுமை சினேகா எடுத்த விபரீத முடிவு!

Date:

சென்னை பனையூர் அருகே வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரமோத் – சினேகா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆன நிலையில், பிரமோத் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2 வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில், கோபித்துக் கொண்ட மனைவி சினேகா, சேலையூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

நேற்றிரவு சினேகாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அவரது கணவர் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த சினேகா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், வரதட்சணை கொடுமை காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக சினேகாவின் தந்தை புகார் அளித்த நிலையில், கணவர் பிரமோத்தை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...

ஈரான் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுப்பு

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக ஈரான் குற்றச்சாட்டு; அமெரிக்கா மறுப்பு போர்நிறுத்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்