“படம் வந்து 13 வருஷமாச்சு … இன்னும் மொட்டுச்சாமி என்னாயா இன்னும் சுத்தபத்தமாதானே இருக்காங்க.” .மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டுக்குள் நுழைந்து இலைக்கடை முருகன் எனக் கேட்டாலோ அல்லது ” சுப்ரமணியபுரம் ‘படத்துல நடிச்சுருப்பாரே அவரு கடை எது’ ‘எனக்கேட்டாலோ, கைப்பிடித்து கடைக்குக் கூட்டிப்போகிறார்கள் மார்க்கெட்வாசிகள். அவரிடம் பேசினோம்.
“அதை ஏன் தம்பி கேட்குறீங்க. எனக்கு நினைச்சுப்பார்த்தா கூட ஒரு கனவு மாதிரி இருக்கு. டைரக்டர் சசிகுமாரும் நடிகர் ஜெய்யும் மதுரை சென்ட்ரல் மார்க்கெட் ஏரியாவுக்கு லோகேஷன் பார்க்க வந்தாங்க. அவுங்க கேமரா எல்லாம் எடுத்து டெஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதெல்லாம் எனக்கு தெரியாதேன்னு சொல்ல, நடிப்பு ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல … நீங்க கிளம்பி வாங்க , நான் பார்த்துக்குறேன்னு சசிகுமார் தம்பி சொல்லிட்டாரு! “
எப்படி இருந்துச்சு ஷூட்டிங் அனுபவம்?
“திண்டுக்கல்லதான் ஷூட்டிங் நடந்துச்சு. ஒரு டயலாக் ஒரே லென்த்துல பேசணும். பேசணும், பேசணும், பேசிக்கிட்டே இருக்கேன். நைட் பத்து மணி வரைக்கும் போயிருச்சு. அண்ணி ரிலாக்ஸாகுங்க. நம்மள நடிக்கவைக்க ஒரு மனுஷனை இப்படி கஷ்டப்படுத்திருக்கோமேனு இப்ப நினைச்சாலும் வருத்தமாதான்.”
இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க?
“இப்பவும் இதே மாட்டுத்தாவணில இலைக்கடைதான் பார்த்துட்டு இருக்கேன். ‘சுப்ரமணியபுரம்’ படத்துக்கு அப்புறம் சில படங்கள் நடிச்சேன். அப்பறம் போதும்னு விட்டுட்டேன். திரும்பவும் சசிகுமார் கூப்பிட்டார்னா எல்லாத்தையும் விட்டுட்டு கெளம்பி போகத் தயாரா இருக்கேன்!”