விஜய் சேதுபதி ஒரு ‘சா…. பி’..னு தெரியுமா….?

Date:

விஜய் சேதுபதி ஒரு ‘சா…. பி’..னு தெரியுமா….?

கோலிவுட்டின் பிசியான நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் மாஸ்டர் ஷெஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் மாஸ்டர் ஷெஃப் நிகழ்ச்சியின் டைரக்டரான சஞ்சீவ் கே. குமார் விஜய் சேதுபதி பற்றி கூறியிருப்பதாவது,

ஒரு பிரபலத்தால் இந்த நிகழ்ச்சியை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும் என்று நம்பினேன். விஜய் சேதுபதி அதற்கு சரியான ஆள். எனக்கு விஜய் சேதுபதியை மிகவும் பிடிக்கும். அவருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.

லாக்டவுனுக்கு முன்பே இந்த நிகழ்ச்சி தொடர்பாக விஜய் சேதுபதியை அணுகினோம். மாஸ்டர் ஷெஃப்பை தொகுத்து வழங்க அவர் ஆர்வம் காட்டினார். லாக்டவுன் முடிந்த பிறகு அனைத்தும் வர்க்கோட்டானது.

விஜய் சேதுபதி மிகப் பெரிய சாப்பாட்டு பிரியர் என்பது பலருக்கும் தெரியாது. அவர் அடிக்கடி சமைக்காவிட்டாலும், உணவு மீதான அவரின் ஆர்வம் அருமை. அது தான் இந்த நிகழ்ச்சிக்கு உதவியது. ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நானும், அவரும் தமிழ் உணவு வகைகள் பற்றி நிறைய பேசியிருக்கிறோம். அவர் சில உள்ளூர் மற்றும் பலருக்கும் தெரியாத ரெசிபிக்களை எல்லாம் பரிந்துரைத்தார். அவரின் உதவியால் புது ஐடியாக்கள் உருவானது என்றார்.

மாஸ்டர் ஷெஃப் தமிழ் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. வார இறுதிநாட்களில் இனி மாஸ்டர் ஷெஃப்பை பார்க்கலாம்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க தடையை தவிர்க்க ‘கள்ளக்காதல்’ உத்தியை பயன்படுத்தியதா சீனா?

ஒரு சீனப் பெண் தொழிலதிபருடன் கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கியுள்ள என்விடியா தலைமைச்...

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் கள்ளக்காதல் விவகாரம்: சிங்கப்பூர் நிறுவனத்தின் விளக்கம்!

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் குறித்த சர்ச்சை தீவிரமடைந்து வரும் நிலையில்,...

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மனைவி காலமானார்

முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ஷவின் மனைவி சந்திர மாலினி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்