மியன்மாரில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நெருக்கடிநிலை மேலும் இரண்டு ஆண்டுகளிற்கு தொடரும் என்று, அந்த நாட்டின் இராணுவத் தலைவர் கூறியுள்ளார்.
இராணுவத் தலைவர் மின் ஆங் லைன் (Min Aung Hlaing), தாம் ஆற்றிய தேசிய உரையில், 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நெருக்கடிநிலை முடிவுறும் என்று தெரிவித்தார்.
மியன்மாருக்கான சிறப்புப் பேராளர் பொறுப்புக்கு மூவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தாய்லந்தின் முன்னைய வெளியுறவுத் துணையமைச்சரை மியன்மார் தேர்ந்தெடுத்தது.
ஆனால் அந்தப் பரிந்துரை ஏற்கப்படவில்லை.
இதற்கிடையே, மியன்மார் மக்கள்தொகையில் 6 வீதமானவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுவிட்டதாக இராணுவத் தலைவர் கூறினார்.
ஆண்டு இறுதிக்குள் மக்கள்தொகையில் பாதிப் பேருக்குத் தடுப்பூசி போடத் திட்டமிட்டிருப்பதாக இராணுவம் முன்னர் கூறியிருந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1