கரம் மசாலாவை ஏன் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்…

Date:

கரம் மசாலாவை ஏன் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்…

மக்கள் அடிப்படையாகப் பயன்படுத்தும் ஒரு மசாலாதான் கரம் மசாலா தூள். கரம் மசாலா தூளானது பல்வேறு மசாலா பொருட்களின் கலவையாக இருக்கிறது. இதனால் இது சைவம் அசைவம் என அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

கிராம்பு, இலவங்கபட்டை, சீரகம், ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் கருப்பு மிளகு இவற்றின் கலவையாக கரம் மசாலா உள்ளது. இந்திய உணவுகளில் சுவையையும் வாசனையையும் அதிகரிக்க முக்கிய பொருளாக கரம் மசாலா உள்ளது. ஆனால் உணவில் சுவையை சேர்ப்பதை தாண்டி இன்னும் பல விஷயங்களை கரம் மசாலா செய்கிறது. கரம் மசாலா பல தாதுக்களின் நன்மைகளை கொண்டுள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கிறது.

செரிமானத்தை மேம்படுத்தும்..
செரிமானத்தை மேம்படுத்துவதில் கரம் மசாலா தூள் பல நன்மைகளை செய்கிறது. இது செரிமானத்தை எளிதாக்குகிறது. இந்த மசாலா வயிற்றில் இரைப்பையின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மேலும் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. செரிமானம் தொடர்பான பிரச்சனைகள், அசிடிட்டி, வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.

​வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது…
கரம் மசாலா பல்வேறு மசாலா பொருட்களின் கலவையாகும். இதனால் இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் பைட்டோ நியூட்ரியன்களை கொண்டுள்ளன. எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் இந்த மசாலா உதவுகிறது. அதிக வளர்சிதை மாற்றம் காரணமாக உடலானது தேவைக்கு அதிகமான கலோரிகளை எரிக்கிறது. எனவே ஒரு நபர் அதிக வளர்சிதை மாற்ற விகிதத்தை கொண்டிருக்கிறார் எனில் அவர் அதிகமான கலோரிகளை எடுத்துக்கொண்டாலும் அவர் உடல் எடை அதிகரிக்காது. எனவே உணவில் கரம் மசாலாவை சேர்ப்பதன் மூலம் கலோரிகளை அதிகமாக எரிக்க முடியும்.

​இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது….
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய ஒரு மசாலா பொருளை தேடிக்கொண்டு இருக்கிறீர்கள் எனில் நீங்கள் கரம் மசாலா மீது கவனம் செலுத்தலாம். கரம் மசாலாவில் ஏலக்காயின் நன்மை உள்ளது. இது உங்கள் இதயத்திற்கு நன்மை பயக்க கூடியது என்று அறியப்படுகிறது. மேலும் இந்த மசாலாவை உணவில் சேர்ப்பது மூலம் உங்கள் இரத்த அழுத்த அளவை சீராக்க முடியும். மேலும் இது உங்கள் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

​புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது….
சில உடல் நல பிரச்சனைகளை தடுப்பதில் நமது உணவே முக்கிய பங்களிக்கிறது. புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை தடுக்க கூட கரம் மசாலா உதவுகிறது. மேலும் கரம் மசாலா பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. எனவே அவை உடலில் புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்