பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான வீட்டு பணிப்பெண் தீக்காயங்களுக்கு உள்ளானதாகக் கூறப்படும் சம்பவத்தின் ஆதாரங்கள், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடம் வேண்டுமென்றே மாற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வாரம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், மண்ணெண்ணெய் போத்தலின் மூடி வைக்கப்பட்டிருந்த இடம் குறித்து புலனாய்வாளர்கள் சந்தேகமடைந்தள்ளதாகவும், அது ஒரு தன்னிச்சையான சம்பவம் என்று கூற முழு காட்சியும் மிக நேர்த்தியாக இருந்ததாகவும் கூறினார். இது வீட்டில் வேறு ஏதேனும் சம்பவம் நடந்ததா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது மேலும் சந்தேகத்தைத் தூண்டும் வகையில் இடம் மாற்றப்பட்டதா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும் கூறினார்.
வீட்டில் இரண்டு சாரதிகள் மற்றும் இரண்டு வாகனங்கள் இருந்ததாக போலீசாரிடம் கூறப்பட்டிருந்தாலும், தீக்காயமடைந்த சிறுமியை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு இரண்டு மணிநேரம் ஆனமை மேலும் சந்தேகத்தை எழுந்துள்ளதாக கூறினார்
பாதிக்கப்பட்டவரின் சகோதரர் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், சம்பவம் நடந்த மறுநாளான ஜூலை 4 ஆம் திகதி ரிஷாத்தின் இல்லத்திற்குச் சென்றதாகவும், பொலிஸைப் போன்ற ஒரு உடையை அணிந்து ஒருவர் தன்னை சந்தித்ததாகவும், இழப்பீட்டை பெற்று இந்த விவகாரத்தை அமைதியாக முடிக்க அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் சுமார் நான்கு மாதங்களாக பதியுதீன் இல்லத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், பெண்ணின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக புகார்களைத் தொடர்ந்து அவரது தந்தை வீட்டிற்கு அழைத்துச் செல்ல பல முறை சென்றார். எனினும், அவரைத் திருப்பிவிட்டனர். பெண்ணிற்கு பேசப்பட்ட சம்பள தொகையை விட ஒவ்வொரு மாதமும் அதிகமாக செலுத்தியுள்ளனர். பெற்றோர்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க இது ஒரு தந்திரமாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, செலுத்தப்பட்ட கூடுதல் தொகைக்கு ஈடாக, வீட்டுப்பணிப்பெண் அதிகமாக வேலைவாங்கப்பட்டுள்ளார்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றின் அடிப்படையில், இறந்தவர் மனிதக் கடத்தலுக்கு பலியானவர் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் பிரதி மன்றாடியார் நாயகம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
முதல் குற்றவாளியான பொன்னையா பண்டாரம் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி சஞ்சய கமகே, தனது வாடிக்கையாளர் மலையகத்தில் இருந்து வீட்டு உதவியாளர்களை வழங்குவதன் மூலம் மட்டுமே மக்களுக்கு உதவி செய்வதாகவும், வீடுகளில் வேலைக்கு செல்வது மலையகத்தில் பொதுவானது என்றும் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் தான் அழைத்து தனது மகளுக்கு வேலை தேட உதவுமாறு கூறினார். கடந்த ஆறு மாதங்களில் இரண்டு முறை ரூ .60,000 வழங்கப்பட்டதாகவும், சகோதரர் நோய்வாய்ப்பட்டபோது மேலும் தொகை கோரப்பட்டதாகவும் அவர் கூறினார். மொத்தமாக 200,000 செலுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
அரசியல் காரணமாக இதுபோன்ற வழக்கு முக்கியத்துவம் பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவல்ல என்று அவர் கூறினார்.
இரண்டாவது சந்தேகபர் முகமது சிஹாப்தீன் தரப்பில் ஆஜரான அனுஜா பிரேமரத்ன, பெற்றோர் மகளிடம் பேச அனுமதிக்கப்படவில்லை என்று கூறினாலும், கிடைத்த தகவல்களின்படி அவர்கள் வீட்டிற்கு வரவில்லை என்று கூறினார். “மாகாணங்களுக்கு இடையே பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டபோது அவர்கள் எப்படி வந்தனர்? அவர்களுக்கு கோவிட் விதிகள் பொருந்தவில்லையா, ”என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மருத்துவமனையில் சேர்க்கும் போது சிறுமி சுயநினைவுடன் இருந்ததாகவும், அவர் போலீசாரிடம் பேசியதாகவும் அவர் கூறினார்.
மூன்றாவது சந்தேக நபரான ரிஷாத் பதியுதினின் மனைவி சிஹாப்தீன் ஆயிஷா சார்பாக ஆஜரான அனில் சில்வா, தனது வாடிக்கையாளர் கிருலப்பனை பொலிசில் மோசமாக நடத்தப்பட்டார் என்றும் அவர் நவம்பரில் அறுவை சிகிச்சை செய்த ஒரு நபர் என்றும் அதன் பிறகு தான் வீட்டு உதவியாளர் அழைக்கப்பட்டதாகவும் கூறினார்.



