27.4 C
Jaffna
April 9, 2025
Pagetamil
இலங்கை

வெள்ளை வானில் வந்த பொலிசார் பலவந்தமாக ஏற்றிச்சென்று தாக்கினர்: யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

பொலிசாரின் சீருடையில் இருந்த நபர்கள்உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினால் பலவந்தமாக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு, துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு, தாக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உரும்பிராய் மேற்கு, அன்னங்கை பகுதியை சேர்ந்த சி.வினோதன் என்ற இளைஞனே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

அவரது முறைப்பாட்டில்,

நேற்று (29) இரவு 9.30 மணியளவில் தனது வீட்டுக்கு அருகில் வெள்ளை நிற வாகனமொன்று வந்து நின்றதாகவும், யாரென பார்க்க சென்ற தன்னை, பொலிஸ் சீருடையில் இருந்த 6 பேர் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு பிடித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அவர்கள் தன்னை தாக்கி, கத்த விடாமல் தொண்டையை திருகி, கைத்துப்பாக்கியால் தாக்கி, மேற் சட்டையை கிழித்து வாயினுள் அடைந்து, தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் அடிக்கிறீர்கள் என கேட்டதற்கு, பதிலேதுமின்றி தாக்கி, வாகனத்தில் கொண்டு சென்றதாகவும்,  பின்னர் நீதானே பேஸ்புக்கில் புலிகளை பற்றி எழுதுகிறாய், 2006, 2009 சண்டைகாலத்தில் எங்கிருந்தாய், ஆவா குழுவா நீ என கேட்டு பலமாக தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

உன்னை வேறு வழக்கில் உள்ளே போடுவோம் என மிரட்டித் தாக்கியதாகவும், வாகனத்தை நிறுத்தி விட்டு அவர்கள் கீழே இறங்கி மது அருந்திய போது, உயிர்ப்பயத்தில் வாகனத்திலிருந்து குதித்து தப்பியோடி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னைத் தேடி பொலிசார் வீட்டுக்கு வந்ததாகவும், தான் வீட்டுக்கு செல்லாமல் இருப்பதாகவும், உயிர்ப்பயம் ஏற்படுமென்ற அச்சத்தில் இந்த முறைப்பாட்டை மேற்கொள்வதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.

இந்த முறைப்பாட்டையடுத்து யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாண பொலிஸ் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரிடம், மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதிக்கு முன்பாக விளக்கமளிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தில் கைதான முதல் ஆள் நான் தான்!

Pagetamil

பிணை நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் வியாழேந்திரன் மீண்டும் சிறையில்

Pagetamil

தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்!

Pagetamil

இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் யாழ் வருகை!

Pagetamil

பேய் விரட்ட சடங்கு செய்ய சென்ற மந்திரவாதி ரூ.38 இலட்சம் பெறுமதியான நகைகளுடன் மாயம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!