வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட தீவுப்பகுதிகளின் சில இடங்களில் கொரோனா தொற்று அபாயம் அதிகரித்து செல்கிறது. புங்குடுதீவு பகுதியில் கடந்த சில தினங்களில் மட்டும் 15 இற்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
கடந்த சில தினங்களாக தீவுப்பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து செல்வதால், திரிபடைந்த வைரஸ் இங்கு பரவியிருக்கலாமா என்ற அச்சமும் சுகாதாரத்துறையினரிடம் ஏற்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் 15 கர்ப்பிணி தாய்மார், 2 குடும்பநல மாதுக்கள் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு பகுதியில் இதுவரை ஒரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.




