யாழ்ப்பாணம், நாவாந்துறையில் 4 இளைஞர்களை பிடித்து, கொடூரமாக தாக்கிய உள்ளூர் “சொர்ணாக்காக்களின்“ காணொலிகள் வெளியாகியுள்ளது.
புறா வளர்ப்பு சர்ச்சையில் 4 இளைஞர்களை பிடித்து, முகத்தில் மிளகாய்த்தூள் வீசி, பச்சை மிளகாய் தேய்த்து கொடூர வதையில் சொர்ணாக்காக்கள் ஈடுபட, அதை சில யுவதிகள், இளைஞர்கள் படம் பிடிப்பது முழுமையாக பதிவாகியுள்ளது.
இந்த காணொலி வெளியாகியதையடுத்து, இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்திருந்தார்.
இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து 5 பெண்களும், ஒரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் தலைமறைவாகி விட்டனர்.
இந்த குற்றச்செயலில் நேரடியாக தொடர்புபட்ட ஆண்கள், பெண்கள், காணொலி பதிவு செய்தவர்கள், பதிவேற்றியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




