ஜீன்ஸ் அணிந்ததால் குடும்பத்தினரால் அடித்துக் கொல்லப்பட்ட 17 வயது பெண்!

Date:

ஜீன்ஸ் அணிந்ததால் 17 வயதான பெண்ணொருவர் அவரது குடும்பத்தினராலேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தது.

நேஹா பாஸ்வான் என்ற 17 வயது பெண் கொல்லப்பட்டார்.

நேஹா ஜீன்ஸ் அணிவதை விரும்பாத தாத்தா மற்றும் மாமாக்கள் தடிகளால் அவரை தாக்கியுள்ளனர்.

நேபாள எல்லைக்கு அருகிலுள்ள தியோரியா மாவட்டத்தில் சாவ்ரேஜி கார்க் கிராமத்தில் நேஹா வசிக்கிறார். அவர் ஜீன்ஸ் அணிவதை விரும்புகிறார். எனினும், அவரது குடும்பத்தினர் அதை விரும்பவில்லை.

அவரது தாயார் சகுந்தலா தேவி பாஸ்வான், ஒரு மத சடங்கு செய்யும் போது நேஹா வீட்டில் ஜீன்ஸ் அணிந்திருந்ததை தொடர்ந்து சச்ரவு தொடங்கியதாக கூறினார்.

ஜீன்ஸ், ரொப்பை கழற்றி, பாரம்பரிய ஆடை அணிந்தபடி சடங்கில் ஈடுபடும்படி தாத்தா, பாட்டி கூறிய போது, நேஹா மறுத்தார். இதையடுத்து அவர் தாக்கப்பட்டார்.

இந்த தாக்குதலில் ஈடுபடாத மற்ற குடும்ப உறுப்பினர்கள், ஒரு ரிக்‌ஷாவை அழைத்து, மயக்கமடைந்த நேஹாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.

இருப்பினும், ரிக்‌ஷாவின் டிரைவர் நேஹாவின் உடலை மறைக்க முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஒரு நாள் கழித்து குடும்பத்தினர் நேஹாவின் உடலைக் கண்டுபிடித்தனர்.

நேஹாவின் தாயார், மாவட்ட மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அங்கு நேஹா இருக்கவில்லை.

பின்னர், கந்தக் ஆற்றின் மேல் உள்ள பாலத்தில் நேஹா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

நேஹாவின் குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் மீது- நேஹாவின் தாத்தா, பாட்டி, மாமாக்கள், உறவினர்கள் மற்றும் ரிக்‌ஷா டிரைவர் உள்ளிட்டவர்கள் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சவுதியிலிருந்த வந்த பெண்ணுக்கு முல்லைத்தீவில் மதுபானம் வழங்கி கூட்டு வல்லுறவு!

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய 33 வயதுடைய பெண்ணொருவருக்குப் மதுபானம் கொடுத்து, கூட்டு...

நெல்லியடியில் 16 வயது பாடசாலை மாணவ ஜோடிகள் மாயம்: சிறார் நீதிமன்றத்தில் அறிக்கை!

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 16 வயதான இரண்டு பாடசாலை மாணவர்கள்,...

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: கவாஜா கருத்துக்கு வோர்னர் ஆதரவு

கடந்த 2018ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்