அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு நான்கு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு நான்கு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இலட்சக்கணக்கான சிட்னி வாசிகள் அடுத்த ஒரு மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த ஊரடங்கு ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியுடன் முடிவடையும். கொரோனா கட்டுக்குள் வரவில்லை என்றால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.




