25 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

யாழில் இந்து ஆலயங்களால் ஏற்பட்டுள்ள அபாயம்: பொறுப்பாக நடக்க கோருகிறார் அரச அதிபர்!

யாழ் மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறை சரியாக பின்பற்றப்படாமை அவதானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

தற்போது யாழ் மாவட்டத்திலுள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி யாழ்ப்பாண குடாநாட்டில் இந்து ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் திருவிழாக்கள் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் வழங்கப்பட்டுள்ள அனுமதியை மக்கள்பின்பற்றவில்லை. சுகாதார நடைமுறையினை பின்பற்றாது இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது.

இது ஒரு அபாய நிலைக்கு இட்டுச் செல்லக்கூடிய ஒரு விடயம். எனவே பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.

நேற்றைய தினம் கரவெட்டிப் பகுதியில் இந்து ஆலய பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டவர்களில் 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல ஆலயங்களில் திருவிழாக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது இடம்பெறுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் கரிசனை செலுத்த வேண்டும்.

அதாவது இந்த இக்கட்டான காலகட்டத்தில் நாம் அனைவரும் ஒத்துழைத்தால் மாத்திரமே இந்த தொற்றில் இருந்து தப்பிக்க முடியும். சுகாதார பிரிவினரால் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் அந்த தளர்வினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதன் மூலமே வழமை போல் எமது செயற்பாடுகளை செயற்படுத்த முடியும்.

எனவே பொதுமக்கள் தற்போதுள்ள நிலைமையினை அனுசரித்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படவேண்டும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாட்டில் போலி வைத்தியர்கள் அதிகரிப்பு – நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

எதிர்ப்புகளை புறக்கணித்து, மாற்றத்திற்கான பயணத்தில் அரசாங்கம்

east tamil

11 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

east tamil

“இந்தியாவிடம் முட்டை வாங்கி சீனாவுக்கு கோழி விற்பது நகைப்புக்குறியது” – சசிகுமார்

east tamil

தனியார் பேருந்து வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!

Pagetamil

Leave a Comment