கொரோனாவே ஒழிக: யாழில் இருந்து புறப்பட்ட சாமியார்!

Date:

கதிரன் சின்னப்பொடியன் கதிரவேல் சாமி யாழ்ப்பாணத்தில் வேலணை சரவணை செல்லக்கதிர்காமம் பொன்னி கோவிலிருந்து இலங்கையில் உள்ள சிவபூமிகளுக்கான பாதயாத்திரையினை தொடக்கியுள்ளார்.

நாட்டுமக்களுக்கு சாந்தியும் சமாதானமும் வேண்டியும் மனித நேயம் கொண்ட அனைத்து மக்களும் இந்த கொடிய நோயில் இருந்து பாதுகாக்க வேண்டியும் இந்த கொடியநோய் மனிதர்களை விட்டு விலக வேண்டியும் இந்த யாத்திரையினை கடந்த 05.07.21 அன்று தொடங்கியுள்ளார்.

யாழில் நயினாதீவு அம்மன் செல்லக்கதிர்காமம்,ஆஞ்சனேயர் கோவில்,தெல்லிப்பளை துர்கைஅம்மன்,நகுலோஸ்வரம், அங்கிருந்து செல்வச்சன்நிதி,வல்லிபுரம் ஆழ்வார், சுட்டிபுரம் அம்மன் கோவில், பரந்தன் சிவன்கோவில்,முல்லைத்தீவு மூங்கிலாறு சிவன் ஆலயம், வற்றாப்பளை அம்மன், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர், தண்ணீரூற்று பிள்ளையார் கோவில் ஊடாக முல்லைத்தீவு திருகோணமலை வீதி ஊடாக கோணேஸ்வரம் செல்லவுள்ளார்

27.05.21 இன்று முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை நோக்கி பயணம் மேற்கொண்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

உலகம் பூராக பரவிக்கொண்டிருக்கும் தொற்று நோய் அற்றுப்போகவேண்டும் என்பதற்காக யாத்திரையினை மேற்கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்