மெல்பனின் மெல்போர்னின் தென்கிழக்கில் உள்ள டன்டினொங், லியோனார்ட் செயின்ட் நகரிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 வயது தமிழ் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு சற்று முன்பாக இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ரித்திஷ் கிருஷ்ணநீதன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
வீட்டிலிருந்து மூன்று பெரியவர்களும் இரண்டு குழந்தைகளும் காப்பாற்றப்பட்டனர்.
உயிரிழந்த குழந்தையை காப்பாற்ற முயன்ற 30 வயதான குடும்ப நண்பர் பலத்த காயமடைந்த நிலையில், த அல்பிரட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எரிவாயு ஹீட்டர் தீப்பிடித்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. எனினும், விபத்து சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை.
ரித்திஷின் தாயார் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று மகனை காப்பாற்றுவதற்கு முயற்சிசெய்திருக்கிறார். அவரது கைகளில் காயமேற்பட்டபோதும் மகனைக் காப்பாற்ற முடியவில்லை.
புகையை சுவாசித்ததால் வீட்டிலிருந்த இரண்டு சிறியவர்களும், 20 வயதான பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரித்திஷின் தாயாரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.