இந்திய சி அணியை வீழ்த்தியது இலங்கை!

Date:

இந்தியாவுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றியீட்டியது. தொடரை இந்தியா 2 -1 என கைப்பற்றியது.

கொழும்பில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில்முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஒரு கட்டத்தில், இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டம் என வலுவாக இருந்தது. ஆனால் பின்னர் சுழற்பந்து வீச்சாளர்கள் பிரவீன் ஜெயவிக்ரம மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் இந்திய நடுத்தர வரிசையைஉடைத்தனர். இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இந்திய தரப்பில் தொடக்க வீரர் பிருத்வி ஷா (49) ஓட்டங்களைபெற்றவர்.

இலக்கை விரட்டிய இலங்கை 39 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. போட்டி மழையால் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டிருந்தது.

இலங்க சார்பில் தொடக்க வீரர் அவிஷ்க பெர்னாண்டோ 76, பானுக ராஜபக்ச 65 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை ஒரு கட்டத்தில் இலங்கை 2 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்களை பெற்றிருந்தது. மேலும் 83 ஓட்டங்களை பெறுவதற்குள் 5 விக்கெட்டை இழந்தது.

இலங்கையின் நடுவரிசை பலவீனத்துடன் இந்திய சி அணிக்கு எதிராக பெற்றியை பதிவு செய்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்ய, கிட்டத்தட்ட பி அணியை ஒத்த இந்திய அணியே இலங்கை வந்தது. எனினும், நேற்றைய போட்டியில் இந்திய தரப்பில் 6 மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில் 5 பேர் அறிமுகம் பெற்றனர்.

ஆட்ட நாயகன் அவிஷ்க பெர்னாண்டோ. தொடர் நாயகன் சூரியகுமார் யாதவ்.

spot_imgspot_img

More like this
Related

நிந்தவூரில் நாளை முதல் கோழி இறைச்சி விலையைக் காட்சிப்படுத்துவது கட்டாயம்-மீறினால் சட்ட நடவடிக்கை

நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சியின்...

அந்தமான் கடற்பகுதியில் வளிமண்டலத் தாழ்வுநிலை உருவாகும் சாத்தியம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தெற்கு அந்தமான் கடற்பகுதியில், வடக்கு சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் இன்று முதல்...

குற்றத்தை ஏற்றுக்கொண்ட ஜோன்ஸ்டன்

பதிவு செய்யப்படாத மற்றும் போலியான இலக்கத் தகடுகளைக் கொண்ட பிஎம்டபிள்யூ (BMW)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்