ஜேர்மனி வெள்ளப்பெருக்கில் சிக்கி மீசாலை இளம் குடும்பஸ்தர் பலி!

Date:

ஜேர்மனியில் அண்மையில்ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கு அனர்த்தத்தில் சிக்கி, ஈழத் தமிழ் இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

பெரும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தின்
euskirchen என்ற இடத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளது தந்தையான இராசரத்தினம் இலக்குமணன் (36) என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

கடந்த 15 ஆம் திகதி அவர் வெள்ளத்தில் சிக்குண்டார் என்பது தெரியவந்துள்ளது.

வீட்டில் தனித்திருந்த சமயம் வெள்ளம் பெருகி வருவது கண்டு அவர் தனது முக்கிய சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு பாதுகாப்புத் தேடுவதற்காக வீட்டுக்கு வெளியே ஓடிவந்தார் என்றும் அச்சமயம் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கார் ஒன்றுடன் மோதுண்ட அவர் பின்னர் காணாமற் போனார் என்றும் சம்பவத்தை நேரில் கண்ட சிலர் கூறியுள்ளனர்.

வெள்ளப் பகுதி ஒன்றில் இருந்து மறுநாள் அவரது சடலம் கண்டெடுக்கப்
பட்டது. அவரது கையில் பச்சை குத்தி இருந்தமையால் அதன் மூலம் சடலம் அடையாளம் காணப்பட்டது.

ஜேர்மனியில் வெள்ளம் பாதித்த மேற்குப் பகுதிகளில் பல தமிழர்களும் சிக்குண்டனர் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. எனினும் அங்கு நேர்ந்த ஓர் உயிரிழப்பு பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட முதல் தகவல் இதுவாகும்

spot_imgspot_img

More like this
Related

திலீபன் நினைவாலயத்தை இடித்தகற்றுமாறு யாழ் மாநகரசபைக்கு யாழ் பிரதிப்பொலிஸ்மா அதிபர் கடிதம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய தற்காலிக...

காட்டு யானையைக் கொல்ல பொறி துப்பாக்கி! சிக்கிய நபருக்கு ரூ.3.1 இலட்சம் அபராதம்!

காட்டு யானையைத் தாக்கும் நோக்கில் பொறி துப்பாக்கி அமைத்ததுடன், அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி...

சூர்ப்பணகையாக நடித்தது ஏன்? – ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

ரன்​பீர் கபூர், சாய் பல்​லவி, யாஷ் நடிக்​கும் ‘ராமாயணா’, நவ.5-ல் வெளியாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்