சினோவெக் தடுப்பூசிக்கு எப்படி அனுமதி?: 3 நிபுணர்கள் பதவி விலகல்!

Date:

சீனாவில் தயாரிக்கப்படும் சினோவெக் தடுப்பூசிக்கு தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியதையடுத்து, கொவிட் தடுப்பூசி தொடர்பான விசேட நிபுணர்கள் குழுவின் 3 உறுப்பினர்கள் அக்குழுவிலிருந்து விலகியுள்ளனர்.

குறித்த தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவதற்கு தாம் அனுமதி வழங்காத போதிலும், தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியதன் காரணமாகவே தாம் இந்த விசேட நிபுணர்கள் குழுவிலிருந்து விலகுவதாக குறித்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குறித்த கொவிட் தடுப்பூசி தொடர்பான விசேட நிபுணர்கள் குழுவிலிருந்து, வைத்தியர்களான ரஜிவ டி சில்வா, காந்தி நாணாயக்கார மற்றும் பேராசிரியர் சன்ன ரணசிங்க ஆகியோரே இவ்வாறு விலகியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்