26.7 C
Jaffna
January 20, 2025
Pagetamil
இலங்கை

அறுந்து விழுந்த பட்டத்தின் நூலால் விபத்து: தாயும், குழந்தையும் பலி!

பட்டத்தின் நூலில் சிக்கி மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் தாயும், குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற தந்தையும், இன்னொரு பிள்ளையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 8.20 மணியளவில் பூசா பிடிவெல்ல நிபுண கடற்படை தளத்திற்கு அருகிலுள்ள காலி-கொழும்பு பிரதான சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

அறுந்து வீழ்ந்திருந்த பட்டமொன்றின் நூல் வீதியை குறுக்கறுத்திருந்தது. அந்த வீதியால் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற குடும்பத் தலைவர், நூலில் சிக்கியபோது, கையால் அகற்ற முயன்றதாகவும், அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் காலியில் இருந்து ரத்கமவிற்கு தனது பெற்றோரை சந்திக்க சென்று கொண்டிருந்தார்.

34 வயதான தாயும், ஒன்றரை வயதான குழந்தையும் உயிரிழந்தனர்.

தந்தையும், ஆறு வயது மகனும் இலேசான காயங்களுடன் கராபிட்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கொக்கல விமானப்படை தளத்துடன் இணைக்கப்பட்ட ஒரு சார்ஜென்ட் என்று போலீசார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

வவுனியா அரச அதிகாரியின் ஊழல்

east tamil

ஊழல் அரசியலை ஒழிக்க உறுதி – ஜனாதிபதி

east tamil

மருந்து உற்பத்தி விரைவில் அதிகரிக்கும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

யாழில் சுழல் காற்றால் 48 குடும்பங்கள் பாதிப்பு

Pagetamil

விசாரணையின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு

east tamil

Leave a Comment