வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா

Date:

வவுனியாவில் தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச்சிலையடியில் இன்று (17) காலை 8.30 மணியளவில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் அனுசரணையில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சோமசுந்தரப்புலவரின் நினைவுரையினை வவுனியா தெற்கு வலய ஆசிரிய ஆலோசகர் நிறைமதி நிகழ்த்தியதுடன், மாணவர்களினால் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடல் பாடப்பட்டதுடன், சோமசுந்தரப்புலவரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்துமு;, மலர் தூபியும் நினைவு கூரப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராஜா, க.சந்திரகுலசிங்கம், மஞ்சுளாதேவி, வவுனியா நகரசபை செயலாளர் இ.தயாபரன், முன்னாள் நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன்,  முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் ரவீந்திரன், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், நகரசபை ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...

சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம்...

தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை

புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தேசிய முதலிடம் –...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்