கருவின் ஏற்பாட்டில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் கலந்துரையாடல்: தமிழ் அரசு கட்சி மாத்திரம் கலந்து கொண்டது!

Date:

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மாற்று அரசியல் சக்தியாக உருவெடுக்கும் முயற்சியாக, கொழும்பில் இன்று எதிர்க்கட்சிகள் பல சந்திப்பில் ஈடுபட்டுள்ளன.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

கொழும்பிலுள்ள ஜானகி ஹொட்டலில் மாலை 3 மணிக்கு சந்திப்பு ஆரம்பமாகியது.

இதில் கலந்து கொள்ள அனைத்து எதிர்க்கட்சி பிரதிநிதிகளிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழர் தரப்பிலுள்ள ஒவ்வொரு கட்சிகளிற்கும் தனித்தனியாக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பிலுள்ள ஒவ்வொரு கட்சிகளிற்கும் தனித்தனியாக அழைப்பு அனுப்பப்பட்டது. எனினும், அனேகமாக தமிழ் கட்சிகள் கலந்துரையாடலில் ஆர்வம் காட்டவில்லை.

இந்த கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டது மாத்திரம் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டமைப்பிலுள்ள ஏனைய இரண்டு கட்சிகள், விக்னேஸ்வரன் தரப்பிலுள்ள கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்