ஜேர்மனியில் வரலாறு காணாத வெள்ளம்: இதுவரை 133 பேர் பலி!

Date:

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஜெர்மனியில் 133 பேர் பலியாகியுள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர்.

ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் கடுமையான மழை பெய்து வருகிறது. பெல்ஜியம், நெதர்லாந்து, லக்ஸம்பேர்க் போன்ற நாடுகளிலும் மழை பெய்து வருகிறது. இதற்கு, காலநிலை மாற்றம் தான் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேற்கு ஜெர்மனியில் ரைன்லாந்து பேலாட்டினேட், வடக்கு ரைன் வெஸ்ட்பேலியா பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், வடக்கு ரைன் வெஸ்ட்பேலியா பகுதியில் மழை வெள்ள சேதங்களை ஆய்வு செய்தார். அவரும் புவி வெப்பமயமாதலே இந்த பேரழிவுக்குக் காரணம் என்று கவலை தெரிவித்தார்.

உலக நாடுகள் புவி வெப்பமயமாதலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

மேற்கு ஜெர்மனியில் அர்வீலர் மாவட்டத்தில் மட்டும் 1300 பேரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை. அங்குஅஹ்ர் நதி கரை உடைப்பெடுத்ததால் 700 பேரைக் கொண்ட ஸ்குல்ட் எனும் கிராமம் முற்றிலுமாக அழிந்தது. ஜெர்மனி பெல்ஜியம் எல்லையை ஒட்டிய ருர்டால்ஸ்பெர் அணை நிரம்பி வழிவதால் கூடுதலாக சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவே கணிக்கப்படுகிறது.

மீட்புப் பணியில் 15,000 பொஸும், ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், 1,000 க்கும் மேற்பட்டவர்களைக் காணாமல் போனதால் எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும்.

அண்டை நாடான பெல்ஜியத்தில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர், அங்கு லீஜ் மற்றும் வெர்வியர்ஸின் சில பகுதிகளை ‘சுனாமி போன்ற’ நீரில் மூழ்கடித்து, மியூஸ் மற்றும் வெஸ்ட்ரே நதிகள் கரைகளை உடைத்து பாய்கின்றன.

ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் வெள்ளிக்கிழமை பேரழிவு பிரதேசத்தை பார்வையிட்டார், பெல்ஜியம் மன்னர் பிலிப் மற்றும் ராணி மாத்தில்தே ஆகியோர் பெபின்ஸ்டருக்கு விஜயம் செய்து, அழிவை பார்வையிட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்