அத்தியாவசிய தேவைகளில்லாத பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளை ஏற்றிச் சென்றதாக குறிப்பிட்டு இரண்டு இ.போ.ச பேருந்துகள் வடமாகாண எல்லையில் வைத்து திருப்பியனுப்பப்பட்டன.
யாழ் மத்திய பேருந்து நிலையம், வவுனிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்துகளே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் காலை 5.45 மணிக்கு புறப்பட்ட வென்னப்புவ சாலைக்கு சொந்தமான பேருந்தும், காலை 9.30 மணிக்கு வவுனியாவில் இருந்து புறப்பட்ட பேருந்துகளும் இன்று காலை இரட்டை பெரியகுளம் சோதனைச்சாவடியில் வைத்து திருப்பியனுப்பப்பட்டுள்ளன.
அத்தியாவசிய தேவைகளற்ற நோக்கங்களிற்காக பயணிகள் பயணிப்பதாக கூறியே திருப்பியனுப்பப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1