ஆலய வாசலில் வாள்வெட்டு: பிரதேசசபை உறுப்பினர் மீது குற்றச்சாட்டு!

Date:

சித்தன்கேணி, சிவன் கோயில் வாசலில் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்கதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நேற்று மாலை 3.30 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

சித்தன்கேணி பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகத்துடன் தொடர்புடைய சர்ச்சையொன்றின் தொடர்ச்சியாக, சிவன் கோயில் வாசலில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆலயத்தின் 6ஆம் திருவிழாவான நேற்று குறிப்பிட்டளவான பக்தர்கள் கூடியிருந்த போது இந்த சம்பவம் நடந்தது.

அரசியல் கட்சியொன்றின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரும், இன்னொருவரும் ஆலய வாசலிற்கு வாளுடன் வந்ததாகவும், நபர் ஒருவருடன் முரண்பட்டதாகவும், பின்னர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். தாக்குதலிற்கு உள்ளானவர் தற்காப்பு கலை பயிற்றுவிப்பர். தற்போது திருநெல்வேலியில் திருமணம் முடித்துள்ளார். அவரும் வாள்வெட்டு நடத்தியவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்திள்ளார்.

காயமடைந்தவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தலை, கையில் காயமேற்பட்டுள்ளது.

ஆலய வாசலில் விழுந்திருந்த வாளையும், கோயிலில் பதிவாகியிருந்த சிசிரிவி காணொளி காட்சிகளையும் ஆலய நிர்வாகம், வட்டுக்கோட்டை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ் ஊர்காவற்றுறை வீதியில் விபத்து !

யாழ்ப்பாணம் -  ஊர்காவற்றுறை பிரதான வீதியில் வேகமாகச் சென்ற கார் ஒன்று...

யாழில். விசேட தேவையுடைய 76 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி

ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான காசோலை வழங்கும்...

நாடாளுமன்ற உறுப்பினர் பி ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஈரோஸ் கட்சி தலைவர் இரா. பிரபாகரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு–

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா கடந்த காலத்தில் ஓட்டமாவடி காளி கோவிலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்