பிறந்த வீட்டில் தங்குவதற்கு ஒரு அறை கேட்ட இளைஞன் அடித்துக் கொலை: பெற்றோர், சகோதரி குடும்பம் கைது!

Date:

கண்டி, ஹசலக பகுதியில் தனது பெற்றோரின் வீட்டில் தனது மனைவி, பிள்ளைகளுடன் வசிப்பதற்கு ஒரு அறை கேட்ட மகன் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த பாதகத்தில் ஈடுபட்ட தந்தை, தாய், சகோதரி, சகோதரியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மினிப்பே, ஹசலக பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் 28 வயதான இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அவரது இறுதிச்சடங்கு நேற்று நடந்தது. இதன்போது, கிராம மக்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த இளைஞன், தனது மனைவி, 3 வயது மற்றும் 21 நாள் குழந்தைகளுடன் தனது பெற்றோரின் வீட்டின் பின்னால் சிறிய குடிசை அமைத்து வசித்து வந்துள்ளார். நிரந்தர தொழில் இல்லாத அவர், கூலி வேலைகள் செய்து வந்துள்ளார்.

இந்த தாக்குதல் 6 ஆம் திகதி நடந்தது. சிகிச்சைக்காக மஹியங்கணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த  8 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொல்லப்பட்ட இளைஞனின் மனைவி நிரோஷா பியதர்ஷினி சம்பவம் பற்றி குறிப்பிடுகையில்-

கடந்த 6ஆம் திகதி இரவு எனது கணவர், நாங்கள் குடியிருக்க ஒரு அறையை தருமாறு அவரது பெற்றோரிடம் கேட்டுள்ளார். அது தர்க்கமாகியுள்ளது. அலறல் சத்தம் கேட்ட போதுதான் நான் ஓடிச் சென்றேன். கணவரின் அப்பாவும், கணவரின் சகோதரியின் கணவரும் கொட்டனால் அவரை அடித்துக் கொண்டிருந்தனர். நான் அவர்களை தள்ளிவிட்டேன்.

கணவரின் சகோதரி வந்து என்னை இழுத்துச் சென்று அறைக்குள் தள்ளி தாளிட்டு விட்டார். அதன்பின்னர் என்ன நடந்ததென்பதை நான் காணவில்லை.

சிறிது நேரம் கழித்து பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் வந்து கதவைத் திறந்தார் என்றார்.

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞனை, ஹசலக பொலிசார் மீட்டு,  ஹசலக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மகியங்கணை மருத்துவமனைக்கும் பின்னர் பதுளை பொது மருத்துவமனைக்கும் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.

கணவர் இறந்துவிட்டதாக 8 ஆம் திகதி பொலிசாரிடமிருந்து தகவல் கிடைத்ததாக பியதர்ஷனி கூறினார்.

உயரிழந்த இளைஞனின் சடலம் நேற்று கிராம மக்களால் பொறுப்பேற்கப்பட்டு, பொது மண்டபத்தில் இறுதி கிரியை மேற்கொண்டனர். இதன்போது, இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி பதாதைகள் வைக்கப்பட்டு, அமைதியான போராட்டமும் நடந்தது.

 

spot_imgspot_img

More like this
Related

யாழ் ஊர்காவற்றுறை வீதியில் விபத்து !

யாழ்ப்பாணம் -  ஊர்காவற்றுறை பிரதான வீதியில் வேகமாகச் சென்ற கார் ஒன்று...

யாழில். விசேட தேவையுடைய 76 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி

ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான காசோலை வழங்கும்...

நாடாளுமன்ற உறுப்பினர் பி ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஈரோஸ் கட்சி தலைவர் இரா. பிரபாகரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு–

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா கடந்த காலத்தில் ஓட்டமாவடி காளி கோவிலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்