தடுப்பூசி செலுத்தப்படாவிட்டால், வேலை இல்லை: இந்த அரசின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு

Date:

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் பயம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பிஜி (Fiji) அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்று பிரதமர் பிராங்க் பைனிமராமா (Frank Bainimarama) அறிவித்துள்ளார்.

‘No Jabs, No Job’ அதாவது தடுப்பூசி (Vaccine) செலுத்திக்கொள்ளவில்லை என்றால், வேலைகள் இல்லை என்ற புதிய தகவலை அளித்த அவர், கொரோனாவைத் தவிர்ப்பதற்கு தடுப்பூசி போடுவது அவசியம் என்றும், அதை மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். டெல்டா மாறுபாடு உலகின் பல நாடுகளின் பிரச்சினைகளை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்டா மாறுபாடு அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் ஒரு பெரிய தலைவலியாகிவிட்டது.

பிஜியின் (Fiji) பிரதமர் பிராங்க் பைனிமராமா, ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்குள் தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும் நவம்பர் 1 ஆம் திகதிக்குள் இரண்டாவது டோஸ் செலுத்தப்படாவிட்டால், பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் சார்பாக, தடுப்பூசி போடுவதில் தீவிரம் காட்டப்பட வேண்டு என்றும், இல்லையெனில் கடுமையான அபராதங்களுக்கு தயாராக இருக்குமாறும் நிறுவனங்களுக்கு தெளிவாக கூறப்பட்டுள்ளது. தனியார் ஊழியர்களுக்கான காலக்கெடு ஆகஸ்ட் 1 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்