சினிமா

‘விக்ரம் வேதா’ ஹிந்தி ரீமேக்… ரிலீஸ் எப்போது தெரியுமா?

விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தை இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இதில் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷனும் விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் சைப் அலி கானும் நடிக்கின்றனர். மேலும் தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி தான் ஹிந்தி ரீமேக்கையும் இயக்குகின்றனர். இந்நிலையில் விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் திகதி இந்த படம் வெளியாக உள்ளது.

Image

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

பதக்கங்களை குவிக்கும் மாதவனின் மகன்!

Pagetamil

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘இண்டியானா ஜோன்ஸ் 5’ படப்பிடிப்பு தொடக்கம்!

divya divya

ராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் சிக்கப் போகும் நடிகைகள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!