தனிமைப்படுத்தல் சட்டங்கள் அப்பாவிகளிற்கு மட்டுமா?: பசிலின் பட்டாசுகளிற்கு இல்லையா?

Date:

சுதந்திர சதுக்கத்தில் இன்று சுதந்திரத்தை தேட வேண்டியுள்ளது. ஒரே நாடு, ஒரே சட்டம் என்று சொன்னீர்களே என இவர்களுக்கு நாம் ஞாபகப்படுத்த வேண்டி உள்ளது. ஏனெனில், தங்கள் துன்பம், துயரம் காரணமாக மக்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அவர்களை இந்த அரசின் பொலிஸ் படை கைது செய்து, சுய தனிமைக்கு அனுப்புகிறது. ஆனால், நேற்று இந்நாட்டுக்கு அமெரிக்காவில் இருந்து, அலாவுதீனின் அற்புத விளக்குடன் வந்த பசில் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, பல இடங்களில் பலர் கூடி நின்று பட்டாசு வெடித்தார்கள். அவர்கள் மீது ஏன் இந்த கொரோனா சட்டம் பாயவில்லை?

அன்று, ஒரே நாடு, ஒரே சட்டம் என்று நீங்கள்தானே சொன்னீர்கள். இன்று, பொது மக்களுக்கு ஒரு சட்டம், ராஜபக்சர்களுக்கு ஒரு சட்டமா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

ஜனநாயகத்தை பாதுகாப்போம்- மனித சுதந்திரத்தை பாதுகாத்திடு என்ற தொனிப்பொருளில், எதிர்க்கட்சிகள் இன்று சுதந்திர சதுக்கத்தில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், தமிழ் முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், வேலு குமார், உதய குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன் போது உரையாற்றிய தமுகூ தலைவர் மனோ எம்பி மேலும் கூறியதாவது,

தோட்ட தொழிலாளர்கள் வேதனம் இல்லாமல், துன்பத்தில் சிக்கி, நிர்க்கதி நிலையை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர். இரசாயன கப்பல் அழிவினால், மீனவர்கள் தொழில் இழந்து தவிக்கின்றனர். உரம் இல்லாமல், விவசாயிகள், விளைச்சல் இல்லாமல், வருமானம் இல்லாமல் துன்புறுகின்றனர்.

இதனாலேயே நாடு முழுக்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. மக்கள் தங்கள் துன்பங்களை நாட்டுக்கு தெரிவிக்க வேறு வழி இல்லை. ஆனால், அரசாங்கம் பொலிசை போட்டு, மக்களை கைது செய்கிறது. கொரோனாவை காட்டி, தனிமைப்படுத்துகிறது.

அதேவேளை பெசில் ராஜபக்ச பலரை கூட்டி நிறுத்தி பதவி பிரமாணம் செய்கிறார். அவரை வாழ்த்தி அவரது கட்சி நபர்கள் கூடி நின்று பட்டாசு வெடிக்கிறார்கள். அவர்களை பொலிஸ் கண்டுக்கொள்வது இல்லை. இது என்ன நியாயம்?

இது சுதந்திர சதுக்கம். இங்கே இன்று சுதந்திரத்தை தேட வேண்டியுள்ளது. நீங்கள்தானே ஒரு நாடு ஒரு சட்டம் என்று சொன்னீர்கள். இன்று மக்களுக்கு ஒரு சட்டம். அரசனுக்கு இன்னொரு சட்டமா?

இலங்கை பொலிஸ் மீது எனக்கு அன்பு இருக்கிறது. ஆனால், அந்த பொலிஸ், அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டு ஆடக்கூடாது. சட்டம் உருவாக்குவது பாராளுமன்றத்தில் ஆகும். நீங்கள் புது புது சட்டங்களை உருவாக்கி மக்களை அடிமைப்படுத்த முயல வேண்டாம். மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுங்கள். ஆர்ப்பாட்டங்கள் நின்று போகும்.

இன்று இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை ஒன்று சேர்த்து, நாம் சிங்கள, தமிழ், முஸ்லிம், பெளத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம் என்ற இலங்கை நாட்டை உருவாக்குவோம் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் நினைவாலயத்தை இடித்தகற்றுமாறு யாழ் மாநகரசபைக்கு யாழ் பிரதிப்பொலிஸ்மா அதிபர் கடிதம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய தற்காலிக...

காட்டு யானையைக் கொல்ல பொறி துப்பாக்கி! சிக்கிய நபருக்கு ரூ.3.1 இலட்சம் அபராதம்!

காட்டு யானையைத் தாக்கும் நோக்கில் பொறி துப்பாக்கி அமைத்ததுடன், அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி...

சூர்ப்பணகையாக நடித்தது ஏன்? – ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

ரன்​பீர் கபூர், சாய் பல்​லவி, யாஷ் நடிக்​கும் ‘ராமாயணா’, நவ.5-ல் வெளியாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்