பசில் ராஜபக்ஸ நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ததையடுத்து வவுனியாவில் வெடி கொழுத்தி கொண்டாட்டம்
பசில் ராஜபக்ஸ நிதி அமைச்சராக பதவியேற்றதையடுத்து பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்களால் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இன்று (08.07) வெடிகொழுத்தி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பசில் ராஜபக்ஸ் இலங்கையின் புதிய நிதியமைச்சராகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இன்று (08) காலை பதவி பிரமாணம் செய்துக் கொண்டார்.
இதனையடுத்து, பொதுஜன பெரமுன கட்சியின் வவுனியா மாவட்ட ஆதரவாளர்களினால் பசில் ராஜபக்ஸ அவர்களை வரவேற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும், வெடி கொழுத்தி மகிழ்ந்ததுடன், அங்கு நின்றவர்கள், வீதியால் சென்றவர்களுக்கு இனிப்புக்களும் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
குறித்த நிகழ்வில் வவுனியா நகரசபையின் உப தவிசாளர் சு.குமாரசாமி, பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் ஆதரவாளர்கள், பொதுஜன ரெமுனவின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.