வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

Date:

இன்றைய தினம் (17.01.2025) வெருகல் பிரதேசத்துக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், பிரதேச செயலாளர் M.A. அனஸ் அவர்களின் தலைமையில் வெருகல் பிரதேச செயலகம் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிரதம அதிதியாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கெளரவ அருண் கேமச்சந்திரா கலந்து கொண்டார். மேலும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ குகதாசன் மற்றும் கெளரவ இம்ரான் மஃரூப் ஆகியோரும் இந் நிகழ்வில் பங்குக்கொண்டிருந்தனர்.

இந்த கூட்டத்தில் துறைசார் திணைக்கள தலைவர்கள், கிராம சேவகர்கள், துறைசார் உத்தியோகஸ்தர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் கிராமமட்ட குழுக்களின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தின் போது, வெருகல் பிரதேசத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள், குறைபாடுகள், மற்றும் அவற்றின் தீர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, பிரச்சனைகளுக்கான தீர்வுகளை விரைவாக வழங்கும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றை செயல்படுத்துவதற்கான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டன.

இந்த கூட்டம் வெருகல் பிரதேசத்தின் மேம்பாடு மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முக்கியமான முறைமையாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

வர்த்தகரை சுட்டுக்கொல்ல பதுங்கியிருந்த 2 பேர் கைது!

ஹொரணைப் பகுதியில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக, அவரது வீட்டின்...

மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி

ரம்பேவ, பொருலுஹின்ன கிராமத்தில் நெல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த மூன்று பெண்கள்...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை ஆரம்பம்…

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்” (Protection of...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்