29.8 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

போராட்டக்காரர்களை அள்ளிச் சென்றது பொலிஸ்; எம்மை கைது செய்; எதிரணி போராட்டம்!

இன்று காலை பத்தரமுல்ல, பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், பொலிசாருக்கும் இடையே பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு எதிராக போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

போராட்டத்தில் செய்தி சேகரித்த ஒரு பத்திரிகையாளர் ஒரு பொலிஸ்காரரால் தாக்கப்பட்டார். இதை தொடர்ந்து அமைதியின்மை ஏற்பட்டதுடன், ஊடகவியலாளர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் சூடான வார்த்தை பரிமாற்றம் இடம்பெற்றது.

போராட்டக்காரர்கள் 33 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நா்டாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களிற்கு தடைவிதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்தின் முடிவு நீதியை எதிர்பார்க்கும் குடிமக்களை அடக்குவதற்கான வெட்கமற்ற செயல் என்றார்

எரிபொருள் விலையை குறைக்க வேண்டும், விவசாயிகளுக்கு உரம், மீனவர்களுக்கு நிவாரணம், சுற்றுச்சூழல் அழிவுக்கு இழப்பீடு மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட தடுப்பூசி வழங்குதல் ஆகியவற்றைக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.

அரசின் கட்டளைகளால் பொதுமக்களின் குரலை மௌனமாக்க முடியாது என்றார்.

நாட்டின் குடிமக்களின் பிரதிநிதிகளாக மனித உரிமைகளை பேணி, சுகாதார நடைமுறைகளையும் பேண முடியுமென்பதை போராட்டக்காரர்கள் புலப்படுத்துவதாக தெரிவித்தார்.

அப்பாவி பொதுமக்களை சட்டவிரோதமாக விரட்டாமல், முடிந்தால் பாராளுமன்ற உறுப்பினர்களான தம்மை கைது செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் அதிகாரிகளுக்கு சவால் விடுத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, பொதுமக்களை கைது செய்யாமல், முடிந்தால் தம்மை கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு சவால்  விடுத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment