கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் (08) 5842 பேருக்கு கொவிட் 19
தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என பிராந்திய தொற்று நோயியல் வைத்திய
அதிகாரி மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.
சுகாதார பணியாளர்கள், ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 60 வயதுக்கு
மேற்பட்டவர்கள் இதில் உள்ளடங்குவதாகவும், இவர்களில் 60 வயதுக்கு
மேற்பட்டவர்கள்ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 5011 பேருக்கும் சுகாதார
பணியாளர்கள் 831 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில்
சுகாதார பணியாளர்கள் 781 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும்
செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள வைத்திய அதிகாரி
தொடர்ந்தும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு
வருவதாகவும் பொது இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தடுப்பூசியினை
பெற்றுக்கொள்ள வேண்டும் என்று் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




