முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கொலை : வீட்டு பணியாளரே கொலை செய்தது அம்பலம்!

Date:

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் நேற்று இரவு அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி வசந்த் விஹாரில் உள்ள மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலத்தின் வீட்டில், செவ்வாய்க்கிழமை இரவு நடந்த கொள்ளை முயற்சியின்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ராஜு (வயது 24), கிட்டி குமாரமங்கலத்தின் வீட்டில் துணி துவைக்கும் வேலை செய்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் இங்கிட் பிரதாப் சிங் தெரிவித்தார்.

நேற்று இரவு வீட்டுக்குள் நுழைந்த ராஜூ மற்றும் அவரின் கூட்டாளிகள் இரண்டு பேர் உள்ளே நுழைந்து கிட்டியைத் தாக்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து அவரை தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளனர்.

குற்றம் நடந்த இடத்தில் சூட்கேஸ்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது ராஜு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது இரண்டு கூட்டாளிகளைத் தேடி வருவதாகவும் பொலீசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ். இணுவில் சந்தியில் கோர விபத்து! துவிச்சக்கர வண்டியில் சென்ற 67 வயதுடையவர் பலி

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ...

நெல் வயலில் விழுந்து உயிருக்குப் போராடும் 15 வயது காட்டு யானை

கிழக்கு வனவிலங்கு மண்டலம்  அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் உள்ள வளத்தாப்பிட்டி...

உணவக உரிமையாளர் மரண வழக்கு: மாடல் ஷ்ரத்தா உள்ளிட்ட 3 பேர் கைது

உத்தர பிரதேச மாநிலம் லக்​னோ​வில் உணவக உரிமையாளர் சிவா சர்மா (28)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்