29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

ஒப்பந்த காலத்திற்கு முன்னதாகவே இடைநிறுத்தப்பட்ட அக்கராயன் வைத்திசாலை உணவு வழங்குனர்!

அக்கராயன் வைத்தியசாலைக்கான உணவு வழங்கல் ஒப்பந்தம் நிறைவுக் காலத்திற்கு முன்னர் நிறுத்தப்பட்டுள்ளதாக உணவு வழங்குனர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளதோடு, இது தொடர்பில் உயரதிகாரிகள் கவனம் செலுத்தி நியாயத்தை பெற்றுத் தருமாறும்
கோரியுள்ளார்.

கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு உணவு வழங்கும் ஒப்பந்தம் நிறைவுக்கு வரும் காலம் ஆறு மாதங்கள் உள்ள நிலையில் எவ்விதமான எழுத்து மூலமான அறிவித்தலும் இன்றி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அக்கராயன்குளம் வைத்தியசாலையின் நோயாளர்களுக்கும், பணியாளர்களுக்குமான சமைத்த உணவு வழங்கும் ஒப்பந்தம் கடந்த 2020.05.01 தொடக்கம் 2021.04.30
வரையான ஒரு வருடக் காலத்திற்கு 248,000 ரூபாவுக்கு ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

ஒப்பந்தத்தை பெற்றகாலத்திலிருந்து நேர்த்தியாக, நடைமுறைகளுக்கு அமைவாக சமைத்த உணவு வழங்கலை அவர் மேற்கொண்டு வந்த நிலையில் எவ்வித காரணங்களும் இன்றி கடந்த 2020.11.04 அன்று தாதிய உத்தியோகத்தர் ஒருவர் ஊடாக வாய்மொழி அறிவித்தல் மூலம் அவரது ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு குறித்த நபர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஒப்பந்தக் காலம் நிறைவுறுவதற்கு ஆறு மாதங்கள் உள்ள போதும் முன்னதாக ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டமைக்கு இதுவரை எழுத்து மூலமான அறிவித்தல் எதுவும் வழங்கப்படவில்லை.

எனவே இது தொடர்பில் அக்கராயன்குளம் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் ராகுலனை தொடர்பு கொண்டு வினவிய போது,

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் தொற்றுநோய் வைத்தியசாலைக்கு உணவு வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டபோது இவரது ஒப்பந்தம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரால் நிறுத்தப்பட்டது. கிருஸ்ணபுரம் வைத்திசாலைக்கான உணவு வழங்கலுக்கு எமது வைத்தியசாலையின் சமையலறை பயன்படுத்தப்படுவதற்கு எடுக்கப்பட்டமையால் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பில் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களிடம் பொறுப்பு வைத்திய அதிகாரி என்ற வகையில் நான் தொடர்பு கொண்டு, உத்தியோகபூர்வமாக யாரேனும் ஒப்பந்த காலம் நிறைவடைவதற்குள் ஏன் உணவு வழங்கல் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது என என்னிடம் வினவினால் எழுத்து மூலம் அறிவித்தல் எதுவும் இன்றி எவ்வாறு பதிலளிப்பது எனக் கேட்டிருந்தேன். அதற்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், அவ்வாறு யாரோனும் வினவினால் தன்னிடம் அனுப்பிவிடுமாறு தெரிவித்தார் என தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஞானசாரர் வைத்தியசாலையில்

Pagetamil

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

Leave a Comment