திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (6) மாலை இடம்பெற்றுள்ளது.
ஈச்சிலம்பற்று கொரோனா இடைத்தங்கல் முகாமில் கடமையாற்றி வந்த சேருநுவர- ஆர்,பி -3 பகுதியைச் சேர்ந்த சீ.மனோகரி (37 ) என்பவரே இந்த விபரீத முயற்சியில் ஈடுபட்டார்.
தற்பொழுது ஈச்சிலம்பற்று கொரோனா இடைத்தங்கல் முகாமில் கடமையாற்றி வருகிறார்.
அவரது கணவர், பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார். குடும்பத் தகராறு காரணமாகவே தனக்குத் தானே தீ மூட்டி கொண்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த தாதிய உத்தியோகத்தர் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




