மன்னாரில் தடுப்பூசி பெறுவதில் மக்கள் ஆர்வம்

Date:

மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை 2 ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிக எண்ணிக்கையான மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டியுள்ளனர்.

மன்னார் ஆடைத் தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் தடுப்பூசி 2 ஆவது நாளாகவும் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது கிராம அலுவலகர் பிரிவுகள் ஊடாக ஒதுக்கப்பட்ட நேரங்களுக்கு அமைய செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (6) நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் முருங்கன் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சமையல் எரிவாயு முறைகேடுகள் இடம்பெற்றால் முறைப்பாடு செய்ய நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தல்

சமையல் எரிவாயுவைக் கொள்வனவு செய்யும்போது இடம்பெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்து உடனடியாகத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்