மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 6 பேரை எதிர்வரும் நவம்பர் 16 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு விட்டு வழக்கு ஒத்திவைப்

Date:

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர்  எம்.ஹரீஸ் உட்பட 6 பேருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அ.தர்ஷினி முன்னிலையில் இன்று திங்கட்கிழமை (2) எடுத்து கொண்டபோது நீதிமன்றில் ஆஜரான நா.உ.அருச்சுனா உட்பட 6 பேரையும் எதிர்வரும் 16ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் மீது  அவதூறாக முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகமது முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம், மற்றும் யூடியூப். முகநூல் தளங்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த திங்கட்கிழமை (21-9-2026) வழக்கு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து குறித்த 6 பேரும் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக முகநூல் மற்றும் சழுக வலைத்தளங்களில் எழுதுவதற்கு கடந்த 28-09-2026 நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து எதிராளிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

இதனையடுத்து குறித்த  வழக்கு விசாரணைக்காக இன்று திங்கட்கிழமை (02) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அ.தர்ஷினி முன்னிலையில் எடுக்கப்பட்ட போது இதில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா,  உட்பட 6 பேர் ஆஜராகினர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா, சார்பில் சட்டத்தரணி கௌசல்யா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்  எம்.ஹரீஸ் ஹபீப் முகமது முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம்,  சிரேஷ்ட சட்டத்தரணி கியாஸ் ஹிஸ்புல்லா தலைமையில் சட்டத்தரணிகள் குழு ஆஜராகினர்.

இதேவேளை இந்த வழக்கு விசாரணையில் சிலர் காரணம் காட்டியிருந்தனர் அருச்சுனா உட்பட சிலர் காரணம் காட்டுவதற்கான காலம் கேட்டிருந்தனர் அதேவேளை  5ம் எதிராளியான அஹமட் லெப்பை முகமது முத்தார் நீதிமன்ற அழைப்பானை கிடைக்கப் பெறாவிட்டாலும் நீதிமன்றில் ஆஜராகி நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளைக்கு தாங்கள் ஒழுகுவதாகவும் அதற்கமைய இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணி சமர்ப்பணம் செய்துள்ளார்

இதையடுத்து காரணம் காட்டாததை காரணம் காட்டுவதற்காக எதிர்வரும் 16ம் திகதி வழக்கை நீதவான் ஒத்திவைத்துள்ளதாக வழக்காளியான வைத்தியர் சுகுணன் சார்பில் கனகலிங்கம் கிசோபனா தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் முச்சக்கரவண்டியில் பிரயாணித்தவர்கள் மீது துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்

திருகோணமலை கப்பல் துறை சந்திக்கு அருகில்  பிரயாணித்த முச்சக்கர வண்டி ஒன்றினை...

கந்தரோடையில் புத்தர் சிலை நிறுவப்பட்ட விவகாரம்; கடும் கண்டனம் வெளியிட்ட தமிழ் அமைப்புகள்!

யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளத்தில் அனுமதியின்றி...

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்