திருகோணமலையில் முச்சக்கரவண்டியில் பிரயாணித்தவர்கள் மீது துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்

Date:

திருகோணமலை கப்பல் துறை சந்திக்கு அருகில்  பிரயாணித்த முச்சக்கர வண்டி ஒன்றினை குறிவைத்து அதன் மீது இனம் தெரியாதவர்கள்   நடாத்திய துப்பாக்கி சூடு; சம்பவத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று திங்கட்கிழமை (02) இரவு 9.15 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக  கப்பல் துறை   பொலிசார் தெரிவித்தனர்.

திருகோணமலை பேக்கரிய வீதி, பெதிஸ்புரவைச் சேர்ந்த 39 வயதுடைய சிறி நாராயண ரத்ன விபூஷண குலதுங்க ஆராச்சிகே கயன் மதுசங்க சோமரத்ன என்பவரே சம்பவ இடத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் சம்பவ தினமான இரவு 9.15 மணியளவில்  பச்சை நிற முச்சக்கர வண்டியில் மூன்று பேர் பிரயாணித்த போது அவர்கள் மீது இனம் தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்தில் மதுசங்க சோமரத்ன என்பவர் உயிரிழந்தார்.

இதில் 36 வயதுடைய திருகோணமலை ஆண்டங்குளம், பகுதியைச் சேர்ந்த  சரித் அசங்க மற்றும் அபயபுர லெனின் மாவத்தையைச் சேர்ந்த 28 வயதுடைய  ஃபிரடெரிக் தர்ஷா டெவெண்டா (டாரல்) என்ற இருவரும் படுகாயமடைந்த நிலையில்  திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இச் சம்பவம் தொடர்பாக  கப்பல் துறை    பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 6 பேரை எதிர்வரும் நவம்பர் 16 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு விட்டு வழக்கு ஒத்திவைப்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...

கந்தரோடையில் புத்தர் சிலை நிறுவப்பட்ட விவகாரம்; கடும் கண்டனம் வெளியிட்ட தமிழ் அமைப்புகள்!

யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளத்தில் அனுமதியின்றி...

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்