வியாழேந்திரன் மெய்ப்பாதுகாவலர் சூடு: கொல்லப்பட்ட என் மகனிற்கு நீதி வேண்டும்; தயார் கோரிக்கை!(VIDEO)

Date:

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் வீட்டின் முன்னால் அவரது மெய்பாதுகாவலாரால் படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் ஆகிய எனது மகனின் படு கொலைக்கு நீதிவேண்டும் என அவரின்தாயார் கோரிக்கை விடுத்துள்ளளார்.

கடந்த மாதம் 21 ம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவர் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவரே உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (06) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் வழக்கு விசரணைக்கு எடுக்கப்பட்டது இதன்போது குறித்த மெய்பாதுகாவலருக்கு கொரோனா தொற்று காரணமாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரமுடியாத நிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது இதன்போது குறித்த சந்தேகநபரான மெய்பாதுகாவலரை எதிர்வரும் 9 ம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு ஆஜரான உயிரிழந்தவரின் தாயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்

எனது மகனுக்கு என்ன நடந்தது என்னத்தினால் பிரச்சனை வந்தது என்றதுடன் எனது பிள்ளைக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுமட்டும்தான் தேவை என்றார்.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்