தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட ‘தோர்’ என்ற சிங்கத்தின் நிமோனியா நிலை மோசமடைந்துள்ளதாக வனவிலங்கு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸநாயக்க தெரிவித்தார்.
மிருகக்காட்சிசாலையில் சிங்கத்திற்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.
சிங்கத்திற்கு தோல் புண்களும் உருவாக்கியுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
சிங்கத்தின் உடல்நலம் தெளிவாக மோசமடைந்துள்ளதாகவும், மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் அதைக் கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1