பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா திடீர் மாற்றம்!

Date:

விஜய்டிவி-யில் தற்போது ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு நல்ல டிஆர்பியும் கிடைத்து வருகிறது. கோபி தான் ராதிகாவுடன் தொடர்பில் இருப்பதை பாக்கியலட்சுமி மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து மறைப்பதற்காக பல்வேறு தில்லாலங்கடி வேலைகளை செய்து வருவது போல காட்டப்பட்டு வந்தது.

இந்த சீரியலில் ராதிகாவாக நடிகை ஜெனிபர் நடித்துவந்தார். இந்நிலையில் ஜெனிபர் திடீரென விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ராதிகாவாக தற்போது பிக் பாஸ் புகழ் நடிகை ரேஷ்மா நடிக்க தொடங்கி இருக்கிறார். இதை லேட்டஸ்ட் ப்ரொமோ வீடியோவில் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள். பலரும் அதிருப்தியான கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரேஷ்மா பிக் பாஸுக்கு பிறகு சன் டிவியின் அன்பே வா சீரியலில் நடித்து வந்தார், அதன் பின் தற்போது அவர் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரிலும் களமிறங்கி இருக்கிறார். ராதிகாவின் மகள் மயூரா ரோலில் நடித்து வந்த குழந்தையும் மாற்றப்பட்டு உள்ளது.

சமீபத்தில் வெளிவந்து இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோவில் ராதிகா வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு செல்கின்றனர். ஆனால் கோபி மட்டும் ஆளை காணவில்லை. பால்காய்ச்சிவிட்டு பாக்கியலட்சுமி மற்றும் குடும்பம் கிளம்பி சென்ற பிறகு தான் ராதிகாவை பார்க்க கோபி வருகிறார்.

நீங்க ஏன் வரவில்லை கோபி என ராதிகா கேட்க, ‘உனக்கு என்னைவிட உன் friends தான் முக்கியமாக போய்ட்டாங்க இல்ல. பாக்யாவை தான் சொல்கிறேன்’ என சொல்லி சத்தமாக பேசுகிறார். அதற்கு மயூ ‘மம்மியை ஷவுட் பண்ணி பேசாதீங்க’ என சொல்கிறார். இந்த விவகாரம் இன்னும் பெரிய பிரச்சனையாக வெடிக்கும் போல தான் தெரிகிறது.

spot_imgspot_img

More like this
Related

கல்முனையில் “எமக்கான சமூக நீதி எழட்டும்” ஊடகவியலாளர் சந்திப்பு

முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், சமூக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களின்...

கல்முனை பொலிஸ் நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அணிவகுப்பு மற்றும் பரிசோதனை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆம்...

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்