இயக்குனர் ஷங்கரை நேரில் சந்தித்த பிரபல நடிகர்!

Date:

தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தியன் 2 திரைப்படம் கிடப்பில் இருக்கும் நிலையில், பிரபல நடிகர் இயக்குனர் ஷங்கரை நேரில் சந்தித்துள்ளார்.

பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது. தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கிடையில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும், இந்தியில் ரன்வீர்சிங் நடிப்பில் அந்நியனை ரீமேக் செய்வதாகவும் ஷங்கர் அறிவித்தார்.

இந்நிலையில், நடிகர் ராம் சரண் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் சென்னை வந்து இயக்குனர் ஷங்கரை சந்தித்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது. இவர்கள் மூன்று பேரின் திடீர் சந்திப்பு, புதிய படம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்க இருப்பதாகவும், தமன் இசையமைக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளது

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேசத்தில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் : “அத்தம” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கை

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை – றிஷாட்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன்...

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்