2 திருமணம் முடித்த ஆசாமி 13 வயது சிறுமியையும் துஷ்பிரயோகம் செய்தார்!

Date:

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 43 வயதுடைய நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று (03) உத்தரவிட்டார்.

குறித்த சிறுமியின் தந்தையார் அவர்களை விட்டு பிரிந்து சென்று விட்டார்.  தாயார் வேலைக்கு சென்ற நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அருகாமையிலுள்ள இரு திருமணங்கள் முடித்த 3 பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடையவர் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுமியின் பெரிய தாயார் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து பொலிஸார் வெள்ளிக்கிழமை குறித்த நபரை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் நேற்று (03) ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஷம்போ பக்கெட்டுகள்

கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 5,386 ஷாம்போ பக்கெட்டுகள்...

வீரவன்சவின் சகோதரருக்கு விளக்கமறியல்

ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசாங்க வாகனங்களை...

வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளைக் குறிவைத்த திருடர்கள் சிக்கினர்

காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்