பூ என்றால் மனம் நிறைந்தது. ஆனால் எல்லா பூக்களின் மனமும் சரியான மனம் அல்ல. சில பூக்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் மனத்தை கொண்டது. இப்படி தீங்கு ஏற்படுத்தும் மலர்களில் ஒன்று டெவில்ஸ் ப்ரீத் எனப்படும் மலர். இந்த பூவை மூக்கிவைத்து முகர்ந்த ஒருவர் அதன் கோரமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதை பற்றி காணலாம் வாருங்கள்.
டிக்டாக்கில் பிரபலமான பாடகி ரஃப்பில்லா வேமேன். இவர் பாடல்களை பாடுவது மட்டுமல்ல பாடல்களை எழுதுவதிலும் புகழ்பெற்றவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த பூ ஒன்றை எடுத்து இவரும் இவரது நண்பம் மூக்கில் வைத்து முகத்து பார்த்துள்ளனர். அந்த பூ மிகவும் விஷத்தன்மை வாய்ந்த பூ.
அந்த பூவை குமர்ந்து பார்த்த இவர்களுக்கு சில நொடிகளில் தலைக்கு போதை ஏறியுள்ளது. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இவர்களுக்கே புரியாமல் போனது. இவர்கள் எப்படியோ தங்கள் வீட்டிற்கு வந்து வீட்டிலிருந்து அவர்கள் எப்படியோ சமாளித்து தூங்கியுள்ளனர்.
மறுநாள் காலையில் இதற்கான காரணம் என்ன என யோசித்த போது இவர்கள் இருவரும் இது எப்படி நடந்தது யோசித்த போது அவர்கள் பூவை முகர்ந்து பார்த்தது தான் காரணம் என நினைவிற்கு வந்தது.பின்னர் அந்த பூ குறித்து தேடியபோதுதான் அது போதை தரும் பூ என தெரிந்தது.